பயணியின் பையை திருடியவரை விரட்டி பிடித்த தொடரூந்து அதிகாரிகள்

பயணியின் பையை திருடியவரை விரட்டி பிடித்த தொடரூந்து அதிகாரிகள்

தொடரூந்து பயணி ஒருவரின், பணப் பையை திருடிய நபரை, தொடரூந்து பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் விரட்டிச் சென்று பிடித்துள்ளனர்.

கொழும்பு - கோட்டையிலிருந்து, புத்தளம் நோக்கி நேற்றிரவு பயணிக்க இருந்த தொடரூந்தில் இருந்த பயணி ஒருவரின் பணப் பையை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்பக்க நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்ற அவரை, டெலிகொம் சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து, தொடரூந்து பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

சந்தேகநபர், இதற்கு முன்னர் தொடரூந்துகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் குறித்து தேடப்படுபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.