யு பி வொரியர்ஸ் அணிக்கு வெற்றி

யு பி வொரியர்ஸ் அணிக்கு வெற்றி

மகளிர் பிரிமியர் லீக் தொடரில் குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யு பி வொரியஸ் அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றதுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் ஜயன்ட்ஸ் அணி, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய குஜராத் ஜயன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதற்கமைய, 170 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய யு பி வொரியர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில், 7 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது.