தமிழர் பகுதியில் கோர விபத்து - 20 வயது இளைஞன் பலி..!

தமிழர் பகுதியில் கோர விபத்து - 20 வயது இளைஞன் பலி..!

வவுனியா - மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று (14.05.2023) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற உந்துருளி வேப்பங்குளம் பகுதியில் பயணித்த போது நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த பாலத்துடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த தனுஜன் (வயது 20) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.