நாட்டில் ஆபத்தான கோவிட் திரிபு பரவுகிறதா - பரிசோதனைகள் முன்னெடுப்பு!

நாட்டில் ஆபத்தான கோவிட் திரிபு பரவுகிறதா - பரிசோதனைகள் முன்னெடுப்பு!

நாட்டில் அண்மைய நாட்களாக கோவிட் பரவுகை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், புதிய திரிபுகள் பரவுகின்றனவா என்பது தொடர்பில் கொவிட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கையில் மிகவும் ஆபத்தான கோவிட் திரிபு பரவி வருகின்றதா என்பது தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்பொழுது மீண்டும் பரவி வரும் கோவிட் திரிபினை அடையாளம் காணும் நோக்கில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

கோவிட் ஒமிக்ரோன் எக்ஸ்.பி.பி. (Omicron XBB) திரிபு நாட்டில் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக கலாநிதி சந்திம தெரிவித்துள்ளார்.