இந்தியாவை உலுக்கிய கோர விபத்து - இலங்கை அதிபர் இரங்கல்..!

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து - இலங்கை அதிபர் இரங்கல்..!

இந்தியாவின் கிழக்கு மாகாணமான ஒடிசாவில் இடம்பெற்ற கோரமான தொடருந்து விபத்தினால் தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான விசேட செய்தியொன்றிலேயே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில் சிறிலங்கா அரசாங்கமும் சிறிலங்கா மக்களும் தமது அண்டை நாடான இந்தியாவுடனும் அதன் சகோதர மக்களுடனும் கைகோர்த்து நிற்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த எதிர்பாராத நிகழ்வை எதிர்கொள்ளும் வலிமையையும் தைரியத்தையும் இந்திய அரசுக்கு தர வேண்டி பிரார்த்திப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.