எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இரு மடங்கு அதிகரிக்கும் விலை! வெளியான அறிவிப்பு..!

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இரு மடங்கு அதிகரிக்கும் விலை! வெளியான அறிவிப்பு..!

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்குகளால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாப சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இரு மடங்கு அதிகரிக்கும் விலை! வெளியான அறிவிப்பு | Lottery Ticket Price In Sri Lanka

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,இருபது ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை இரட்டிப்பாகும். அதனை, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த விலை அதிகரிப்புக்கு நிதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டால், ஒரு லொத்தர் சீட்டுக்கான விற்பனை முகவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 3.75 ரூபாய் தரகு பணம் 8 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.

தரகு பணத்தை எட்டு ரூபாயாக அதிகரிக்காவிட்டால் லொத்தர் சீட்டுகளை விற்க முடியாத நிலை ஏற்படும்.

லொத்தர் சீட்டுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது தொழிற்சங்கம் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலையை அதிகரிப்பதில் லொத்தர் சீட்டுகளை வாங்குபவருக்கும் ஆட்சேபனை இருப்பதாக அவர்களுடனான உரையாடலில் இருந்து தெரியவருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.