தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டி படுகொலை..!
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை, அவுபர்ன் சைட் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,