2023 இல் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள்!

2023 இல் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள்!

மனிதனின் கண்களில் புலப்படாத பலவிதமான உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

உலகம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

அந்தவகையில், இந்த ஆண்டு (2023) ஆரம்பத்தில் சில புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டிகாப்ரியோவின்

2023 இல் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள்! | New Creatures Discovered This Year In 2023

டிகாப்ரியோவின் அதாவது நத்தை உண்ணும் பாம்பு என இது அழைக்கப்படுகிறது.

இந்த வகை உயிரினம், தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டிலும், மத்திய அமெரிக்காவின் பனாமா நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் அறிவியல் பெயர் சிபோன் 'இர்மெலிண்டிகாப்ரியோ' எனக் கூறப்படுகிறது.

ஸ்ட்ரீம் ட்ரீப்ராக்

2023 இல் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள்! | New Creatures Discovered This Year In 2023

இது ஒருவகையான மரத்தவளையாகும். இந்த உயிரினம் தென் அமெரிக்க நாடான ஈக்வேடாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் அறிவியல் பெயர் 'ஹைலோசிர்டஸ் டோல்கீனி' ஆகும்.

வளைந்த கால் கெக்கோ

2023 இல் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை உயிரினங்கள்! | New Creatures Discovered This Year In 2023

இந்த வகை உயிரினம் தென்கிழக்கு ஆசிய நாடான திமோர் - லெஸ்தே நாட்டில் காணப்படுகிறது.

இதன் அறிவியல் பெயர் 'சைர்டோடாக்டிலஸ் சான்டானா' ஆகும்.