ஆயிரக்கணக்கான டொலர்களை மோசடி செய்த இந்தியர் கைது..!

ஆயிரக்கணக்கான டொலர்களை மோசடி செய்த இந்தியர் கைது..!

ஆயிரக்கணக்கான அமெரிக்க டொலர்களுக்கு மேல் மோசடி செய்த இந்திய நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு- கொம்பனிதெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து 300,678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளார்.

சந்தேகநபர் 65 வயதுடைய இந்தியர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.