தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல் ; வீழ்ச்சியடைந்த விலை - இன்றைய நிலவரம்!

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல் ; வீழ்ச்சியடைந்த விலை - இன்றைய நிலவரம்!

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.

அந்தவகையில், கடந்த காலங்களில் அதிகரிப்பை காட்டி இருந்த தங்கத்தின் விலையானது இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 605,740 ரூபாவாக காணப்படுகின்றது.

gold price today

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 170,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,600 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 21,370 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,590 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என கூறப்படுகிறது.