பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் மாயம்

பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் மாயம்

பயாகல பகுதியில் உள்ள சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர் சிறிய பயாகல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.

குறித்த மாணவன் மேலும் மூவருடன் இணைந்து கடற்கரையை ஒட்டியுள்ள பாறை அணைக்கு அருகில் நீராடிக்கொண்டிருந்த போது, நீரோட்டத்தில்  சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.