மீண்டும் சரியும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்..!

மீண்டும் சரியும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்..!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(26.06.2023) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

மீண்டும் சரியும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம் | Dollar Rate In Sri Lanka Today

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை  240.61 ரூபாவாகவும், கொள்வனவு விலை  226.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  344.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  325.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  401.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   380.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.