ஹட்டனில் பாரிய மண்சரிவு! சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்...

ஹட்டனில் பாரிய மண்சரிவு! சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்...

ஹட்டன் - மஸ்கெலியா, நோட்டன் – தியகல பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மழையுடனான காலநிலையையடுத்து இன்றைய தினம் (27.06.2023) காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஹட்டனில் பாரிய மண்சரிவு! சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல் | Landslide Landslide In Huttonஇதனால் நோட்டன் – தியகல வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சரிந்து விழுந்துள்ள மண்மேட்டை அகற்றும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.