இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை...

இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை...

தம்புள்ளை அருகே தனியார் பேருந்தில், துருக்கி சுற்றுலாப் பெண் ஒருவரிடம் அத்துமீற முயன்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றிலே குறித்த  இராணுவ வீரர், தம்புள்ளை தலைமையக பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணிபுரியும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த கோப்ரல் ஒருவராவார் என தெரியவந்துள்ளது.

இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை | Soldier Tried To Rape A Turkish Tourist

சம்பவம் தொடர்பில் துருக்கி பெண் பேருந்தில் இருந்த ஏனைய பயணிகளுக்கு அறிவித்ததையடுத்து, சந்தேகநபர் தம்புள்ளை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்ட போது அவர் இராணுவ கோப்ரல் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பில் தம்புள்ளை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.