இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான வரியில் திருத்தம்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரியில் திருத்தத்கை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோக்கிராம் பால்மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வரித் திருத்தமானது நேற்று(12) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோக்கிராம் பால்மாவிற்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோக்கிராம் பால்மாவிற்கு நிதியமைச்சு 100 ரூபா வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரித்திருத்தம் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால்மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.