கேகாலை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: சந்தேகநபர் தப்பியோட்டம்..!
கேகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலாபிட்ட மட துனுமல பகுதியில் இன்று (14.07.2023) காலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் கெப் வண்டியில் பயணித்த சரத் வேரகொட என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் T - 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.