காணாமல்போன வயோதிபர் வாவியில் சடலமாக மீட்பு..!

காணாமல்போன வயோதிபர் வாவியில் சடலமாக மீட்பு.!

மட்டக்களப்பு - வாவிக்கரையில் உள்ள வாவியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - சேதுக்குடாவில் கடந்த 5ஆம் திகதி காணாமல்போன வயோதிபரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

73 வயதுடைய கதிர்காமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல்போன வயோதிபர் வாவியில் சடலமாக மீட்பு | Body Of Missing Elderly Person Recovered In Vavi

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல்போன நிலையில் அவரது சடலம் இன்று வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.