மூன்று வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுமி!

மூன்று வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுமி!

நுவரெலியா - கொட்டகலையை சேர்ந்த பவிஷ்ணா என்ற மூன்று சிறுமி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த செந்தில்குமார் - ரேவதி தம்பதிகளின் புதல்வியே இந்த சாதனையை படைத்துள்ளார்.

தனது மூன்று வயதில், உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

மூன்று வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை சிறுமி! | Guinness World Records Sri Lankan Tamil Child

உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இதற்காக விண்ணப்பித்து ஏப்ரல் மாதம் சாதனை படைத்த சிறுமியாக அறிவித்து இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.