ட்விட்டரில் பறவை சின்னம் மாற்றப்பட்டது.. எலான் மஸ்க் அதிரடி!

ட்விட்டரில் பறவை சின்னம் மாற்றப்பட்டது.. எலான் மஸ்க் அதிரடி!

கடந்த ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை $44 பில்லியனுக்கு வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார். அதன் சின்னமான நீல பறவை சின்னத்திலிருந்து "X" ஆக மாறியுள்ளது.

இன்று பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும் என்று மஸ்க் கூறியிருந்த நிலையில். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார்.

"இது விதிவிலக்காக அரிதான விஷயம் - வாழ்க்கையிலோ அல்லது வியாபாரத்திலோ - மற்றொரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்," என்று அவர் ட்வீட் செய்தார். 

"ட்விட்டர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் நாங்கள் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றியது. இப்போது, ​​எக்ஸ் மேலும் சென்று உலகளாவிய வர்த்தகத்தை மாற்றும்" என்று கூறியுள்ளார்.

X Corp என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் Twitter இனி ஒரு தனி நிறுவனமாக இருக்கப்போவது இல்லை.  

முக்கிய நபர்களுக்கு ப்ளூ டிக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை மாற்றி, சந்தா கட்டினால் மட்டுமே ப்ளூ டிக் என்னும் முறையை கொண்டு வந்தார் எலான் மஸ்க்.  

மேலும் ட்விட்டர் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு பலவித அப்டேட்களையும் கொடுத்து வருகிறார்.  ட்விட்டர் ஏற்கனவே மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள மெட்டாவுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.  

தற்போது ட்விட்டர் URL x.com twitter.com க்கு திருப்பி விடப்படுவதுடன், லோகோ மாற்றப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டரை வைத்து விளையாடுவது இது முதல் முறை அல்ல. ஏப்ரல் 2023ல், ட்விட்டரின் நீல பறவை லோகோ, கிரிப்டோகரன்சியான Dogecoin இன் லோகோவால் மாற்றப்பட்டது. இருப்பினும், சில நாட்களில் அது மீண்டும் மாற்றப்பட்டது.