இளம் யுவதி இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்பு.

இளம் யுவதி இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்பு.

இளம் யுவதி ஒருவர் வீட்டிலிருந்து இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை - திக்வெலை பிரதேசத்தில் இன்று (24.07.2023) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதுடைய பி.எஸ்.சந்திரிகா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளம் யுவதி இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்பு | Women Death Body Fround In Mataraபெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையான சந்திரிகா, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இன்று வேலைக்குச் செல்லாது வீட்டில் அவர் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று முற்பகல் 11 மணியளவில் வைத்தியசாலைக்குக் கிளினிக்குச் சென்ற பெற்றோர், பிற்பகல் 2 மணியளவில் வீட்டுக்கு வந்த வேளை மகள் தனது அறையில் இரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளதைக் கண்டுள்ளனர். 

அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக திக்வெலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இளம் யுவதி இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்பு | Women Death Body Fround In Matara

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் பெற்றோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னரே மரணம் தொடர்பில் உண்மையான தகவல் தெரியவரும் என்று திக்வெலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.