குளியலறையில் இருந்த பெண்ணை இரகசியமாக காணொளி எடுத்த சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்..!

குளியலறையில் இருந்த பெண்ணை இரகசியமாக காணொளி எடுத்த சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்..!

அம்பாறையில் வீட்டொன்றிற்குள் இரகசியமாக சென்று குளியலறையில் இருந்த பெண் ஒருவரை கைத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த காவல்துறை உத்தியோகதத்தர் கைது செய்யப்பட்டள்ளதாக அம்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை காவல்துறை திணைக்களத்தின் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குளியலறையில் இருந்த பெண்ணை இரகசியமாக காணொளி எடுத்த சிறிலங்கா காவல்துறை உத்தியோகத்தர்! | Woman Bath Video Police Officer Arrested

இந்நிலையில் அருகில் உள்ள வீட்டு வளாகத்துக்குள் இரகசியமாக பிரவேசித்து அந்த வீட்டின் குளியலறையில் இருந்த பெண்ணை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துக்கொடிருந்த போது பிடிப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை காவல்துறையினர் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.