இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்!

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்!

  மினுவாங்கொடையில் காணாமல்போன 25 வயதுடைய இளைஞரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

குறித்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்! | Missing Person Minuwangodaமினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கலஹுகொட பிரதேசத்தில் காணாமல்போனதாக கூறப்படும் 25 வயதுடைய இளைஞரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

காணாமல் போன இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591612 அல்லது 031 – 2295223 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.