கோதுமை மாவை விரைவில் இறக்குமதி செய்ய கோரிக்கை.

கோதுமை மாவை விரைவில் இறக்குமதி செய்ய கோரிக்கை.

கோதுமை மாவை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புறக்கோட்டை கோதுமை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் கடந்த 16 ஆம் திகதி முதல் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு தீர்ந்து வருவதால் கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோதுமை மாவை விரைவில் இறக்குமதி செய்ய கோரிக்கை | Request To Import Wheat Flour As Soon As Possibleகோதுமை மா இறக்குமதியை நிறுத்துவதன் மூலம் நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரு நிறுவனங்களினதும் கை ஓங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கோதுமை மாவின் மொத்த விலை 180 ரூபாவாகவும், இந்நாட்டின் இரண்டு நிறுவனங்களின் ஒரு கிலோ மாவுக்கான விலை 200 ரூபாவாகவும் உள்ளது .