நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி.

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி.

ஹங்வெல்ல, தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (13.08.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தும்மோதர நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 14 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி | Drowned Ypung Boy Death Hanwella

இந்நிலையில் உயிரிழந்த நபர் ஹொகந்தர வடக்கு - அரங்கல, மாலபே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஹர்ஷ மதுஷன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீராட சென்ற குறித்த குழுவினர் அதிக மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரண விசாரணை இன்று (14.08.2023) நடைபெறவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.