முல்லைத்தீவில் வாகன விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் பலி.

முல்லைத்தீவில் வாகன விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் பலி.

முல்லைத்தீவு- புகுடியிருப்பு போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம்(19.08.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் குறித்த நபர் சிகிச்சை பலனின்று இன்று (20.08.2023) உயிரிழந்துள்ளார்.

குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் 47 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் வாகன விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் பலி | Accident In Mullaitivu Family Members Deathடிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.