திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!

திருகோணமலை துறைமுக காவல் பிரிவிற்கு உட்பட்ட மகமாயப்புரம் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை நேற்று மாலை (04)  கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் போதை பழக்கம் உடையவர் என்றும் கேரள கஞ்சாவை உபயோகிக்கும் நோக்கில் அவரது உடைமையில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்ததாகவும் துறைமுக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது! | One Arrested With Kerala Ganja In Trincomalee

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 420 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர் (34 )வயதுடையவர் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் இன்று (05) திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் துறைமுக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.