மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் பாவனை

மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் பாவனை

பாடசாலைகளில் 15 தொடக்கம் 18 வயதிற்கிடையிலான மாணவர்களிடையே ஹெரோயின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைகளுக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகி வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என உளவியலாளர் கலாநிதி கிஹான் அபேவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தற்போது ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்கள் ஏனைய போதைப்பொருள் பழக்கத்திற்கு அதிக நாட்டத்தை காட்டுகின்றனர், இதனால் அவர்களின் நிலைமை இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது என்று வைத்தியர் அபேவர்தன தெளிவுபடுத்தினார்.

மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் பாவணை | Prevalence Of Drug Abuse Among Youth

ஹெரோயின் போதைப்பொருள் பாவனையை இடையில் நிறுத்துவதன் மூலம் உடல் சார்ந்த சோர்வு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படும். கூடுதலான அளவில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்வதால் சுவாசத்தை கடுமையாக பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வலிப்பு அல்லது உடல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இது ஹெரோயின் போதைப்பொருள் பாவனையின் விளைவாக ஏற்படும் அறிகுறிகளாகும்.

எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கூர்மையாகக் கண்காணிக்குமாறு வைத்தியர் வலியுறுத்தினார்.