இலங்கையில் மற்றுமொரு விபத்து; 22 பேர் காயம்.

இலங்கையில் மற்றுமொரு விபத்து; 22 பேர் காயம்.

கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இலங்கையில் மற்றுமொரு விபத்து; 22 பேர் காயம் | Another Accident In Sri Lanka 22 People Injuredஅதேநேரம் பேரூந்தின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பேருந்துடன் மோதியது. விபத்தில் காயமடைந்த 22 பேரில் இருவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கஜுகம பிரதேசவாசிகள் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.