விருந்துபசாரத்தில் பறிபோன உயிர்.

விருந்துபசாரத்தில் பறிபோன உயிர்.

வீட்டொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குருநாகல், அம்பன்பொல – திம்பிரியாவ பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விருந்துபசாரத்தில் பறிபோன உயிர் | A Life Lost In The Feastவிருந்துபசார நிகழ்வின் போது ஏற்பட்ட மோதல் காரணமாகவே வீட்டின் உரிமையாளரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , 27 வயதான குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.