தாயிடம் சங்கிலி பறிப்பு ; துரத்திச்சென்ற மகனுக்கும் அதேநிலை.

தாயிடம் சங்கிலி பறிப்பு ; துரத்திச்சென்ற மகனுக்கும் அதேநிலை.

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.

தாயிடம் சங்கிலி பறிப்பு ; துரத்திச்சென்ற மகனுக்கும் அதேநிலை | The Mother S Chain Is Brokenஇதன் போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண்ணின் மகன் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார்.

இதனை அவதானித்த திருடன் உடனே கத்தியை காட்டி மகனை பயமுறுத்தி மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.