தமிழர் பகுதியில் ஆசிரியரை தேடிச் சென்று வாழ்த்திய மாணவர்கள்!

தமிழர் பகுதியில் ஆசிரியரை தேடிச் சென்று வாழ்த்திய மாணவர்கள்!

திருகோணமலையை சேர்ந்த குமார் நிசாந்தன் எனும் ஆசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இழுவைப் படகு மூலமாக பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் ஆசிரியரை தேடிச் சென்று வாழ்த்திய மாணவர்கள்! | Trincomalee Students Congratulated The Teacher

இன்றைய தினம் (06-10-2023) ஆசிரியர்தினம் என்பதால், ஆசிரியர் நாளாந்தம் பயணித்து பாடசாலைக்கு வரும் இழுவைப் பாதை படகு சேவைக்கு மாணவர்கள் சென்று மாலையிட்டு ஆசிரியரை வாழ்த்தியுள்ளனர்.

தமிழர் பகுதியில் ஆசிரியரை தேடிச் சென்று வாழ்த்திய மாணவர்கள்! | Trincomalee Students Congratulated The Teacher

இச் சம்பவமானது குறித்த ஆசிரியரின் ஆசிரியத்துவ பணியின் மகத்தான சேவைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கின்றது.  

குறித்த மாணவர்கள் தேடிச்சென்று வாழ்த்திய சம்பவத்தையடுத்து ஆசிரியருக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.  

தமிழர் பகுதியில் ஆசிரியரை தேடிச் சென்று வாழ்த்திய மாணவர்கள்! | Trincomalee Students Congratulated The Teacher