மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை : காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை..!

மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை : காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை..!

சமீபக்காலமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மேலும்,

“சாதாரணமாக, இது ஒரு பேனாவை போல தோற்றம் கொண்டிருந்தாலும், அதை ஆராயும் போது அதில் போதைப்பொருள் சிகரெட் மறைக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை : காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை..! | Drug Use Among Students Sl Police Investigation

இந்த போதைப்பொருள் பாவனையானது தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி காலியை அண்மித்த பகுதியிலுள்ள பயிற்சி வகுப்பொன்றில் இவ்வாறான பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.” என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.