தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத கடை உரிமையாளருக்கு நேர்ந்த சம்பவம்.

தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத கடை உரிமையாளருக்கு நேர்ந்த சம்பவம்.

கலவான பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத காரணத்தினால் கடை உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 லட்சத்திற்கும் அதிகமான சொத்தை கொள்ளையடித்த அந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத கடை உரிமையாளருக்கு நேர்ந்த சம்பவம் | Shocking Shop Owner Didn T Reload His Mobile Phoneகைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் ஒன்றைக் கடனாகக் கேட்டதாகவும் ஆனால் கடை உரிமையாளர் மறுத்துவிட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது வீட்டில் இருந்து பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கலவான நிககொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும் அந்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர் எனவும் கலவான பொலிஸார் தெரிவித்துள்ளார் திருடப்பட்ட பொருட்களில் சுமார் பத்து பவுண் பெறுமதியான தங்க நகைகளும் அடங்குவதாக கலவான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.