முச்சக்கரவண்டி - பாரவூர்தி மோதி விபத்து; ஒருவர் பலி.
பண்டாரவளையில் இடம் பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பண்டாரவளை - இராவணன் எல்ல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இவ் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கலகெதர பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என்பதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.