மின்னல் தாக்கத்திற்கிலக்காகி ஒருவர் பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
அம்பாறை - ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் அவ்விடத்திலேயே மரணமடைந்த நிலையில், மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (07.10.2023) பிற்பகல் 2 மணியவில் இடம்பெற்றது.

இதன்போது ஒலுவில் வெளிச்சம் வீட்டுக்கு அருகாமையில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்துக்குள்ளனர்.
ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.
மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.