வீதியில் அனுமதிக்க முடியாத மோட்டார் சைக்கிள்களுடன் 8 இளைஞர்கள் கைது!

வீதியில் அனுமதிக்க முடியாத மோட்டார் சைக்கிள்களுடன் 8 இளைஞர்கள் கைது!

திருகோணமலை நிலாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் வீதியில் அனுமதிக்க முடியாத எட்டு மோட்டார் சைக்கிளுடன் எட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது  இன்று (08)இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மோட்டார் சைக்கிளானது போட்டிக்காக கொண்டு வந்ததாகவும் இதில் ஆறு மோட்டார் சைக்கிளுக்கு அனுமதிப் பத்திரம் இல்லை என்பதும் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் எனவும் தெரியவருகிறது.

வீதியில் அனுமதிக்க முடியாத மோட்டார் சைக்கிள்களுடன் 8 இளைஞர்கள் கைது! | 8 Youths Arrested With Motorcycle On Road

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சுமார் 20 தொடக்கம் 25 வயதுடைய மீகமுவ மற்றும் அதனை அண்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீதியில் அனுமதிக்க முடியாத மோட்டார் சைக்கிள்களுடன் 8 இளைஞர்கள் கைது! | 8 Youths Arrested With Motorcycle On Roadகைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்களை உரிய மோட்டார் சைக்கிளுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.