தமிழர் பகுதி பாடசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்.
முல்லைத்தீவு வலயத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (09) ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.
பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து வருகை தந்த நபர்கள் பாடசாலைக்குள் அத்து மீறி பிரவேசித்து மாணவர்கள் சிலரை தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வெளியில் ஏற்பட்ட முரண்பாடு பாடசாலை வரை கொண்டு வரப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுவதற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் புது குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும், பாடசாலை நிர்வாகம் சமரசமாக செல்வதாக கேட்டுகொண்டதற்கு இணங்க எச்சரிக்கையுடன் சந்தேக நபர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.