தெல்வத்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.

தெல்வத்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.

தெல்வத்தயில் மீட்டியகொட பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

தெல்வத்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு | Injured Person Dies In Thelvatha Firingஅப்போது ​​வீட்டில் பதுங்கியிருந்த சந்தேக நபர் துப்பாக்கியால் சிறப்பு அதிரடிப்படையினரை நோக்கி சுட்டுள்ளார்.

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போது சந்தேக நபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.