பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவன் மாயம்.

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவன் மாயம்.

கண்டியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலஹா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 5ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவர் ஒருவரே நேற்று நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவன் மாயம் | Student Returning Home From School Is Delusionalஇதனையடுத்து பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அப் பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய நாளின் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் இன்று மீண்டும் தேடுதல் பணிகள் இடம்பெறவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.