70 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்தி
கஹவத்தையில் 70 அடி பள்ளத்தில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஹவத்தை ஹுனுவல அல்லின்ன பொல்வத்தஹேன பிரதேசத்தில்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நேற்று (11) இரவு இடம்பெற்ற பாரவூர்தியின் சாரதி பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணித்த இருவர் காயங்களுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிகளுக்கு உணவு ஏற்றிச் சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.