நயன்தாராவிற்கு விக்கி கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்... வைரம், ரோஸ் கோல்ட் என பதித்த வாட்ச்சின் விலை தெரியுமா...

நயன்தாராவிற்கு விக்கி கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்... வைரம், ரோஸ் கோல்ட் என பதித்த வாட்ச்சின் விலை தெரியுமா...

 நயன்தாராவிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்சின் விலை தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் ஸ்டார் நடிகையாகவும் இருக்கிறார்.

நயன்தாராவிற்கு விக்கி கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்

நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார். மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.

நயன்தாராவிற்கு விக்கி கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்அதுமட்டுமில்லாமல் தற்போது 9 Skin என்ற புதிய பிஸ்னஸ் ஒன்றையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார் நயன்தாரா.

தற்போது நயன்தாராவின் பழைய புகைப்படத்துடன் அவரின் அழகான வாட்ச் ஒன்றும் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் கிப்ட்டாக கொடுத்த வாட்ச் பற்றி பகிர்ந்திருந்தார்.

நயன்தாராவிற்கு விக்கி கொடுத்த ரோலக்ஸ் வாட்ச்அதாவது அந்த வாட்ச் ரோலக்ஸ் கம்பெனியை சார்ந்ததாகவும் 31 mm டைலரைக் கொண்டதாகவும், டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ள அந்த வாட்ச் 23 இலிருந்து 26 லட்சம் ரூபா வரை இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.