ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள்.

ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள்.

65 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் | Bills To Be Issued Through Auction Sale

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.