நவம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

நவம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

எதிர்வரும் நவம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் | Results Of Ordinary Level Examination In Novemberஇதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.