காதல் பிரச்சனையால் 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.

காதல் பிரச்சனையால் 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.

தெஹிவளை பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் பாலத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (19-10-2023) 10.20 மணியளவில் அத்திட்டிய இகிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து இந்த சிறுமி குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் பிரச்சனையால் 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் | 16 Year Old Girl Suicide Love Problems Dehiwala

அத்திட்டிய இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுமார் 6 மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹட்டன், டிக்கோயாவைச் சேர்ந்த பிரசன்னவதனி என்பதும், அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், அவர் பெல்லன்விலவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

காதல் பிரச்சனையால் 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் | 16 Year Old Girl Suicide Love Problems Dehiwala

குறித்த சிறுமி காதல் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாவும், தெஹிவளை சந்தியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரியும் போது, 29 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.