புகையிரதத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு.

புகையிரதத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு.

புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே பெண் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புகையிரதத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு | Woman Died After Being Hit By A Trainசீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியன்கேமுல்ல பிரதேசத்தில் நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சீதுவ, லியன்கேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.