தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள்
இலங்கையில் கடந்த 9 மாதங்களில், 14 வயதுக்கு உட்பட்ட 120 பாடசாலை மாணவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் 31 மாணவர்கள் தொழுநோயால் பாதிப்படைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.