கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது!

கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது!

மொரட்டுவை கோரல்வெல்ல பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆட்களை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைத்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த  07 இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது! | 7 Youths 1 Young Woman Criminal Activities Colomboசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் ஓரினச்சேர்க்கை வழங்குவதாகக் கூறி அவர்களின் வீடுகளுக்கு அழைத்து வந்து இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட 07 இளைஞர்களும் யுவதி ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது! | 7 Youths 1 Young Woman Criminal Activities Colombo

சந்தேகநபர்கள் ஒன்றினைந்து குறித்த நபரிடமிருந்து 02 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதேவேளை, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 06 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் குறித்த நபர் ஓரினச்சேர்க்கைக்காக மொரட்டுவை கோரல்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளார்.

கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது! | 7 Youths 1 Young Woman Criminal Activities Colombo

16 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த நபரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்கள் அறையில் தங்கியிருந்த வேளையில், அந்த இளைஞனின் சகோதரன் போல் வேடமணிந்து மற்றுமொரு இளைஞன் அந்த இடத்திற்குள் புகுந்து அவர்களின் நடவடிக்கைகளை விசாரித்துள்ளார்.

அதன்பிறகு, வேறு சில இளைஞர்கள் அந்த இடத்திற்கு வந்து, தாங்கள் அண்ணனின் நண்பர்கள் என்று கூறி, சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர். 

சம்பந்தப்பட்ட நபரை அடித்து, தாக்குதல்களின் காணொளிகளை பதிவு செய்த பின்னர், அனைத்து காணொளிகளையும் இணையத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி அவரிடம் பணம் கோரியுள்ளனர்.

கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது! | 7 Youths 1 Young Woman Criminal Activities Colombo

இவ்வாறு குறித்த இளைஞர் குழு, குறித்த நபரின் வங்கி அட்டையை எடுத்து அதிலிருந்து 02 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டனர்.

சம்பவத்தின் பின்னர் குறித்த இளைஞர்கள் மீண்டும் பணம் கேட்டதால் இது தொடர்பில் மொரட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்து உடனடியாக செயற்பட்ட மொரட்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று சம்பவத்திற்கு உதவிய 20 மற்றும் 18 வயதுடைய தம்பதியினரைக் கைது செய்துள்ளார்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய 07 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது! | 7 Youths 1 Young Woman Criminal Activities Colomboஇச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான கையடக்கத் தொலைபேசி செயலியைப் பயன்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகக் கூறிய இளைஞன் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்களின் கைத்தொலைபேசிகளை பரிசோதித்த போது, ​​முன்னர் இவ்வாறு குற்றச்செயல்களில் சிக்கியவர்களின் பல காணொளிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

குறித்த நபரின் ஏ டி எம் அட்டையில் இருந்த 200,000 பணத்திலிருந்து 193,000 ரூபா பணத்தினை மொரட்டுவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்களிடமிருந்த 09 கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.