சாதாரண தர பரீட்சையில் 25 ஏ சித்திகள் பெற்ற ஒரே வீட்டில் பிறந்த அதிசய சகோதரர்கள்

சாதாரண தர பரீட்சையில் 25 ஏ சித்திகள் பெற்ற ஒரே வீட்டில் பிறந்த அதிசய சகோதரர்கள்

தென்னிலங்கையில் ஒரே வீட்டில் பிறந்த மூன்று சகோதர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களும் சாதாரண தர பரீட்சையில் 25 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அனுத மினுல கஜநாயக்க, அகிந்து விருல கஜநாயக்க மற்றும் அமிரு சனுல கஜநாயக்க என்ற ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, அனுத 9 ஏ சித்திகளையும் அமிருவும் அகிந்துவும் 8 ஏ சித்திகளையும் 1 பி சித்தியையும் பெற்று அதிக மதிப்பெண்களுடன் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சையில் 25 ஏ சித்திகள் பெற்ற ஒரே வீட்டில் பிறந்த அதிசய சகோதரர்கள் | Three Brothers Born One Home Best Result O L Exam

மேலும், மூன்று சகோதரர்களும் நாகொடை ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை ஒன்றாகக் கற்று 5ஆம் தர புலமைப்பரிசிலில் மூன்று சகோதரர்களுமே பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அத்தோடு, காலி புனித அலோசியஸ் கல்லூரியில் சாதாரண தர பரீட்சையில் தோற்றி இந்தச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.