ரஷ்யாவில் புதிதாக 5,871பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று!

ரஷ்யாவில் புதிதாக 5,871பேருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்து ஆயிரத்து 871பேர் பாதிப்படைந்ததோடு, 146பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், மொத்தமாக எட்டு இலட்சத்து 6ஆயிரத்து 720பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 13ஆயிரத்து 192பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 96ஆயிரத்து 388பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து இலட்சத்து 97ஆயிரத்து 140பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.