கொழும்பு - பதுளை தொடருந்து சேவை முடக்கம்

கொழும்பு - பதுளை தொடருந்து சேவை முடக்கம்

கொழும்பு - பதுளைக்கான தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான தொடருந்து பயணங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த தொடருந்து தலவாக்கலைக்கும் கிரேஸ்வெஸ்ட்டன் பகுதிக்கும் இடையில் தடம் புரண்டதால் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.

மட்டுப்படுத்த சேவை

குறித்த தொடருந்து தடம் புரண்டதின் காரணமாக கொழும்பு நோக்கி செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

 

கொழும்பில் இருந்து வரும் பயணிகள் தலவாக்கலை வரையும் பதுளையில் இருந்து வரும் பயணிகள் நானுஓயா வரையும் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தலவாக்கலை தொடருந்து நிலையம் தெரிவித்துள்ளது.